விளையாட்டு

#INDvsENG 2வது டெஸ்ட்.. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சொதப்பலாக பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது சென்னை மைதானத்தில் வைத்து தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 329 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய ரோஹித் 161 ரன்களை குவித்தார்.

அதன்பிறகு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. இந்த முறையும் அஸ்வின் சூழலில் இங்கிலாந்து அணி சிக்கியது. அஸ்வினின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 134 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஃபோக்ஸ் 42 ரன்களை அடித்தார். அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 195 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது.

முதல் இன்னிங்ஸை போலவே கில் இதிலும் சொதப்பி 14 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த ரோஹித் 26 ஆட்டமிழந்தார். பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவாக பெவிலியன் திரும்பினர். புஜாரா 7, பாண்ட் 8, ரஹானே 10, அக்சர் 7 ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தனர். இரண்டாவது இன்னிங்சில் மிக மோசமாக இந்திய அணியினர் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக லீச் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். தற்போது களத்தில் விராட் மற்றும் அஸ்வின் விளையாடி வருகின்றனர்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் – 138/6

விராட் – 30*
அஸ்வின் – 24*

Back to top button
error: Content is protected !!