விளையாட்டு

#INDvsENG 2வது டெஸ்ட்.. இந்தியா – 96/3.. கோலி “டக்” அவுட்..

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டு உள்ளார். அக்‌ஷர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளார்.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை ஆரம்பித்த இந்திய அணியில் ஷூப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 1 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 47 பந்தில் அரை சதமெடுத்து ரசிகர்கள் உற்சாகம் கொள்ள செய்திருக்கிறார். அவர் 70 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார். வீராட் கோலி டக் அவுட் ஆகினார். புஜ்ரா 21 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 24 நான்கு ஓவர் முடிவில் 96 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Back to top button
error: Content is protected !!