#INDvsENG 2வது டெஸ்ட்.. இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பு..

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. தற்போது இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே 5 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது முதலாவதாக தங்களது டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றனர். இந்த இரு அணிகளின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. பின்பு பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 329 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 161 ரன்களை குவித்தார். அதன்பின்பு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது.
முதல் இன்னிங்சில் இந்திய அணியிடம் இங்கிலாந்து அணி சரணடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 134 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா அணி தரப்பில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டை கைப்பற்றினார். அதன்பின்பு இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. இதில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்ப விராட் கோஹ்லி மட்டும் அரைசதம் அடித்தார். பின்பு பௌலிங்கில் கலக்கிய அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் தனது 5வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 286 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 482 ரன்களை இலக்காக வைத்தது. கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் சிப்லே 3, பர்ன்ஸ் 25, லாரன்ஸ் 26, லீச் 0, ஸ்டோக்ஸ் 8 ஆட்டமிழந்து ஏமாற்றினர். தற்போது களத்தில் ரூட் மற்றும் போப் விளையாடி வருகின்றனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 3 மற்றும் அக்சர் 2 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியின் இந்திய அணி சுலபமாக தனது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லைவ் ஸ்கோர்:
இங்கிலாந்து அணி – 90/5
ரூட் – 22*
போப் – 0*