தமிழ்நாடு

அரசின் ‘வலிமை’ சிமெண்ட் வெளிவந்தால்..! தொழிற்துறை அமைச்சர் அப்டேட்!!

தமிழக அரசின் வலிமை சிமெண்ட் சந்தையில் விற்பனைக்கு வரும்போது வெளிசந்தையில் சிமெண்ட் விலை குறையும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அரசு கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தது. இதனையடுத்து சட்டசபையில் துறை வாரியாக விவாதம் தொடங்கியது. ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் துறைகளுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். மற்ற துறைகளை தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் அரசால் ‘வலிமை’ என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கட்டுமான பொருட்களில் முக்கிய பொருளான சிமிண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கட்டுமான தொழிலாளர்களும் வேலையிழந்து சிரமப்பட்டு வருகின்றனர். அண்டை மாநிலங்களில் 300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் 450 முதல் 490 ரூபாய் வரை விற்கப்படுகிறது. துறைவாரியாக விவாதத்தில் போது தமிழகத்தில் சிமிண்ட்டின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பாமக உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 490 ரூபாயாக உயர்ந்த சிமெண்ட்டின் விலை, அரசின் தொடர் நடவடிக்கையால் தற்போது 420 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் அரசின் டான்செம் நிறுவன ஆலைகள் மூலம் 18 டன் சிமெண்ட் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். நேற்று சட்டசபையில் தெரிவித்த அரசின் வலிமை சிமெண்ட் சந்தைக்கு வரும்போது வெளி சந்தையில் சிமெண்ட்டின் விலை குறையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதன் மூலம் இனி வரும் காலங்களில் கட்டுமான தொழில்கள் வளர்ச்சி அடையும் இதனால் தொழிலாளர்களும் பயன் பெறுவர் என்று எதிர்பார்க்கபடுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: