இந்தியா

இண்டிகோ விமான நிலைய மேலாளர் சுட்டுக் கொலை!

பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள விமான நிலையத்தில் பணியாற்றிய இண்டிகோ மேலாளர் ரூபேஷ் சிங்கை, அவரது வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று (ஜன.12) பணி முடிந்து வந்த ரூபேஷ் சிங், அவரது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது. அவரது உயிரிழப்பிற்கு இண்டிகோ நிர்வாகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Back to top button
error: Content is protected !!