உலகம்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை துணை பத்திரிகை செயலாளராக இந்திய பெண் நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வருகிற 20-ந் தேதி பதவி ஏற்க உள்ளனர்.

இதையொட்டி ஜோ பைடன் தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்களை நியமனம் செய்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியினருக்கு அவர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். .

அந்த வகையில் தனது நிர்வாகத்தில் பல முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை அவர் நியமித்துள்ளார்.

அந்த வகையில் வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதிக்கான துணை பத்திரிகை செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சிங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசின் பிரசார குழுவின் செய்தி தொடர்பாளராக சப்ரினா சிங் இருந்தார். அதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் போட்டிக்கு போட்டியிட்ட கோடீஸ்வரர் மைக் புளூம்பெர்க் மற்றும் கோரி புக்கர் ஆகியோரின் பிரசாரத்தின் தேசிய பத்திரிகை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதற்கு முன்னர் ஜனநாயக தேசிய குழுவில் தகவல் தொடர்பு துணை இயக்குனராகவும், ஹிலாரி கிளிண்டனின் 2016 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பிராந்திய தகவல் தொடர்பு இயக்குனராகவும் சப்ரினா சிங் பணியாற்றியிருக்கிறார்.

Back to top button
error: Content is protected !!