மாவட்டம்

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுக்குழு கூட்டம்..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகில் மாவட்டத் தலைவர்கள் நிஜாம், அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கோரிக்கைகளை முன்வைத்தார்.

இக்கோரிக்கைகளான CAA, NPR & NRC திரும்பப்பெற சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வலியுறுத்தல் வேண்டும். பொதுமக்கள் மீதான கொரோனா கால வழக்குகளை திரும்பப் பெறுதல் வேண்டும். சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியை கேட்டு பெற வேண்டும். நின்றுவிட்ட திருச்சி ஜங்ஷன் மேம்பால பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும். கட்சிக்கு ஊறுவிளைவிப்போர் மீது நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை கேல்விக்குறியாக்கும் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். திருச்சி காந்தி மார்கெட் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்க வலியுறுத்தல் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. ஆகவே அதை கருத்தில் கொண்டு தமிழக முதவமைச்சர் மற்றும் ஆட்சித்தலைவர் ஆகியோர் காந்தி மார்கெட் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இந்நிகழ்ச்சியில் தேசிய கவுன்சில் உறுப்பினர் மன்னான், தெற்கு மாவட்ட செயலாளர் ஹபிபுர் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர் பாரூக் மற்றும் பலர் உள்ளனர்.

loading...
Back to top button
error: Content is protected !!