வேலைவாய்ப்பு

இந்திய கடற்படை 230 காலிப்பணியிடங்கள் – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் செயல்படும் Naval Ship Repair Yard அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் அதிகாரபூர்வத் தளத்தில் வெளியான அவ்வறிவிப்பில் Apprenticeship Training Trade பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே இப்பணி குறித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – Indian Navy
பணியின் பெயர் – Apprenticeship Training Trade
பணியிடங்கள் – 230
கடைசி தேதி – 01.10.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

பணியிடங்கள் :

Apprenticeship Training Trade பணிகளுக்கு என 230 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 01.01.2021 தேதியில் அதிகபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

மத்திய/ மாநில அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பள்ளிகளில் Matriculation Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவற்றுடன் பிரிவு வாரியாக பணிக்கான பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

அரசு நெறிமுறைகளின் கீழ் Apprenticeship விதிப்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் அனைவரும் தங்களின் Matric & ITI மதிப்பெண்களின் அடிப்படையில் Written Test & Oral Exam மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ள ஆர்வமுள்ளவர்கள் 01.10.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://drive.google.com/file/d/1LNj5C8LcfjjcptoSZNQZJbXCGfLleZKc/view?usp=sharing

Official Site – https://www.joinindiannavy.gov.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  அடிதூள்! ரூ.1,10,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
Back to top button
error: