தொழில்நுட்பம்இந்தியாதமிழ்நாடு

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே! இந்த தேதி வரை இணையதள சேவைகள் சரியாக செயல்படாது.. வங்கி நிர்வாகம் அறிவிப்பு.. உஷாரா இருங்க..

இந்தியன் வங்கியின் இணையதள சேவைகளை பெறுவதில் வரும் 15ம் தேதி வரை சில பிரச்சினைகள் இருக்கும் என இந்தியன் வங்கி நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.

வரும் 15ம் தேதி வரை இந்தியன் வங்கியின் இணையதள சேவைகளை பெறுவதில் சில பிரச்சினைகளை வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் என அந்த வங்கியின் நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. நெட்பேங்கிங் உள்ளிட்ட சில விஷயங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இத்தகைய பிரச்சினைகள் பிப்ரவரி 15 ம் தேதிக்குப்பிறகு சரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

indian bank

இது குறித்து இந்தியன் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” சமீபத்தில் இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இரு வங்கிகளின் மென் பொருட்களையும் இணைக்கும் வேலை தொடங்கியுள்ளதால் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை வாடிக்கயாளர்கள் புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும். 15ம் தேதிக்கு பிறகு சிக்கல்கள் சரி செய்யபட்டு வழக்கமாக அனைத்து சேவைகளும் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!