மகளிர் தினம்: சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு

 

நாடு முழுவதும் சிலிண்டர்களின் தேவை இப்போது அத்தியாவசியமாகிவிட்டது. இதன் காரணமாக வணிக மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களின் விலை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் சிலிண்டர் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் மத்திய அரசு தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு ஓர் அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

அதாவது இன்று மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் மக்களின் குடும்ப நிதிச்சுமை பெருமளவு குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த சிலிண்டர் விலை குறைப்பு பெண்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 
 
 
Exit mobile version