கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி பெங்களூரு கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு எட்டரை மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை ஏப்ரல் 1-ந் தேதி, 8-ந் தேதி மற்றும் 15-ந் தேதிகளில் இயக்கப்படும் என்றும் இதேபோல் மறுமார்க்கமாக வேளாண்கண்ணியில் இருந்து வருகிற 26-ந் தேதி இரவு 11.55 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலையில் பிற்பகல் 12.30 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.