வயநாடு நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது!!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 308 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரோன் அடிப்படையிலான ரேடார் உதவியுடன் நான்காவது நாளாக தேடுதல் பணிகள் தொடர்கின்றன.
Posted in: இந்தியா