குடியரசு தினத்தை முன்னிட்டு வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
ரூ.199 மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இந்த நன்மையைப் பெற, பயனர்கள் VI செயலியைப் பதிவிறக்கம் செய்து, வாடிக்கையாளராகப் பதிவு செய்து ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
- Advertisement -
ரூ.199 முதல் ரூ.299 வரை திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்கள் 2ஜிபி கூடுதல் டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. ரூ.299க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்கள் 5ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெறலாம். குடியரசு தின சலுகையாக இருந்தாலும் பிப்ரவரி 7ம் தேதி வரை கிடைக்கும் என வோடபோன் ஐடியா அறிவித்துள்ளது.
- Advertisement -
ரீசார்ஜ் செய்த பிறகு கூடுதல் இலவச டேட்டா 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். வோடபோன் ஐடியா எப்போதும் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டாவை வழங்கி வருகிறது.