திருமலை ஸ்ரீவாரி கோவிலில் ஜனவரி 2 முதல் 11 வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது. தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே வைகுண்டத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருப்பதியில் 9 இடங்களில் ஜனவரி 1ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வீதம் 10 நாட்களுக்கு 5 லட்சம் டோக்கன்களை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
