ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஜூன் 6ஆம் தேதி நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. இதில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
முதல்நிலைத் தேர்வு மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. தற்போது இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் upsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்கலாம்.
இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த மெயின் தேர்வுக்கு தயாராகலாம் என மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.