UPI பரிவர்த்தனைகளில் புதிய சாதனை.. இதுவரை இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் பணப் பரிமாற்றங்கள்!
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அடிப்படையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் சாதனை அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) படி, நாடு முழுவதும் கடந்த மாதம் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்புள்ள 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 2016 இல் UPI செயல்படுத்தப்பட்டதிலிருந்து இது ஒரு மாதத்தில் அதிகபட்சமாகும்.
வெள்ளிக்கிழமை NPCI பகிர்ந்த தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாதத்தில் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் 10 சதவீதம் மற்றும் மதிப்பு அடிப்படையில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
அக்டோபரில் தினசரி UPI பரிவர்த்தனைகள் 535 மில்லியன் மற்றும் அவற்றின் மதிப்பு ரூ.75,801 கோடியைத் தாண்டியுள்ளது என்று NPCI தெரிவித்துள்ளது. அதே செப்டம்பரில் ரூ. 68,800 கோடி மதிப்பிலான 501 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.