இந்தியாவில் அக்டோபர் 2022 முதல் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் கிடைக்கும் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
5ஜி ஏலம் முடிந்தவுடன் ஸ்பெக்ட்ரத்தை அரசாங்கம் விரைவில் ஒதுக்கும், இது அக்டோபரில் சேவைகளை வெளியிட வழிவகுக்கும் என்று அவர் கூறினார். முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
உலகம் முழுவதும் 5ஜி வெளியீடு மெதுவாக இருப்பதாகக் கூறிய அவர், பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 5ஜி மிக வேகமாக வெளியிடப்படும் என்றார். 5ஜி சேவைகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டால், அரசு தலையிட்டு, அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் சந்தை சமநிலையில் செயல்படும் என்றார்.
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் இருந்து சனிக்கிழமை வரை 1.49 லட்சம் கோடி ரூபாயை அரசாங்கம் ஈட்டியுள்ளதாகவும், இது 1.5 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என்றும் வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh