பிரதான் மந்திரி வித்யாலட்சுமி யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
உயர்கல்விக்காக மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்காக பிரதான் மந்திரி வித்யாலட்சுமி யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதான் மந்திரி வித்யாலட்சுமி யோஜனா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுபற்றி பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதான் மந்திரி வித்யாலட்சுமி யோஜனா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 860 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் வெளிப்படையாகவும் எளிமையாகவும் கடன் உதவி பெற முடியும் என்றார்.
2024 முதல் 2031 வரை ரூ.3 ஆயிரத்து 600 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 7 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Posted in: இந்தியா