மத்திய பட்ஜெட் வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில் முழு பட்ஜெட் வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.