மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடக்கம்!
2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. நாளை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இன்று தொடங்கும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாள் கூட்டத்தொடரில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
Posted in: இந்தியா