மத்திய பட்ஜெட் 2024 : 300 யூனிட் வரை இலவச மின்சாரம்.. 3 கோடி வீடுகள் கட்டப்படும்..!
நரேந்திர மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா, தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதன்படி பட்ஜெட்டில், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதாவது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்டப்படும். நகரங்களில் ஒரு கோடிக்கணக்கான வீடுகள் கட்டப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நகரங்களில் வீடுகள் கட்ட 2.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 100 நகரங்களில் சுகாதாரத்தை பராமரிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் கோடி வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இம்முறை மத்திய அரசு பட்ஜெட்டில் அணுசக்திக்கு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. புதிய அணுஉலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Posted in: இந்தியா