முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான மறுதேர்வின் விரிவான கால அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதி பெற தேசிய தகுதித் தேர்வு எனப்படும் நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது தேசிய தேர்வு முகமை மூலமாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் முறை கேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது.
அதனை தொடர்ந்து யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான மறுதேர்வின் விரிவான கால அட்டவணையை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. மறு தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, தேர்வு மையம், ஹால் டிக்கெட் ஆகியவற்றை http://www.ugcnet.nta.nic.in; http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.