corona covid virus

இந்தியாவில் H3N2 வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழப்பு..!

இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் 82 வயதான ஹிரே கவுடா என்ற முதியவர் இந்த நோயினால் உயிரிழந்த நிலையில், தற்போது ஹரியானாவில் இந்த வைரசால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இன்ஃப்ளுயன்சா H3N2 என்ற வைரஸ் அதிக அளவில் காற்றின் வழியாக பரவும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

எனவே கொரோனா தொற்றுக்கு கடைப்பிடித்த தடுப்புமுறைகளின் மூலம் இந்த நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளது.