சர்வதேச மற்றும் அமெரிக்க சந்தைகளின் சரிவுகளுக்கு மத்தியில் இன்று, இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் சிவப்பு நிற குறியீட்டில் வர்த்தகமாகின்றன. இன்று வர்த்தகம் சென்செக்ஸ் 69 புள்ளிகளும், நிஃப்டி 6 புள்ளிகளும் சரிவுடன் தொடங்கியது.
- Advertisement -
பிஎஸ்இயின் 30-பங்கு குறியீட்டு எண் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 69 புள்ளிகள் சரிந்து 58,168-ல் தொடங்கியது, அதே நேரத்தில் என்எஸ்இ-யின் 50-பங்கு குறியீடு நிஃப்டி 6 புள்ளிகள் சரிந்து 17,160-ல் வர்த்தகம் தொடங்கியது.