மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கொன்றுவிட்டு, அவரது அலுவலகத்தை வெடி வைத்து தகர்க்கப் போவதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று காலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள கட்கரியின் அலுவலகத்திற்கு காலை 11.25, 11.32 மற்றும் 12.30 மணிக்கு மூன்று மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்தன.
இதுகுறித்து கட்கரி அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட நாக்பூர் போலீசார், சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தினர்.
நாக்பூர் துணை போலீஸ் கமிஷனர் ராகுல் மதனே, அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.
இதனிடையே, கட்கரியின் அலுவலகத்திற்கு மிரட்டல் அழைப்பு வந்ததையடுத்து, போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
Leave a Comment