-Advertisement-
கொரோனா பாதிப்பால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் பக்தர்கள் அதிக அளவில் வர முடியவில்லை. 2022ல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.1,320 கோடி கிடைத்துள்ளது. இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-Advertisement-
இந்த ஆண்டு இதுவரை 2.35 கோடி பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.. 11.42 கோடி லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
-Advertisement-