நிகழாண்டில் 7.5 சதவீதம் பேர் கூடுதலாக வருமான வரி தாக்கல் – மத்திய நிதியமைச்சகம் தகவல்
2024-25ஆம் ஆண்டில் 7 கோடியே 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருமான வரி தாக்கல் செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தினம் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வருமான வரி தாக்கல் செய்தவர்களின் விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த மதிப்பீட்டு ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் 7.5 சதவீதம் பேர் கூடுதலாக வருமான வரி தாக்கல் செய்திருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக நிகழாண்டில் 7 கோடியே 28 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர்கள் வரி தாக்கல் செய்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், 5 கோடியே 27 லட்சம் பேர் புதிய முறைமையின்படியும், 2 கோடியே ஒரு லட்சம் பேர் பழைய முறையின்படியும் வரிதாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Posted in: இந்தியா