ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் ரயில் தண்டவாளங்களும் சேதமடைந்தன.
இந்நிலையில், தென் மத்திய ரயில்வே மீண்டும் பல ரயில்களை ரத்து செய்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் தவிர பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இயக்கப்படும் ரயில்களும் இதில் அடங்கும்.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
- செகந்திராபாத்-சிர்பூர் ககஸ்நகர் (17233)
- சிர்பூர் காகஸ்நகர்-செகந்திராபாத் (17234)
- விசாகப்பட்டினம் – செகந்திராபாத் (12783)
- விசாகப்பட்டினம்-செகந்திராபாத் (22203)
- பெங்களூர் – ஹவுரா (12864)
- கடப்பா-விசாகப்பட்டினம் (17487)
- அடிலாபாத்-நாந்தேட் (17409)
- நாந்தேட்-அதிலாபாத் (17410)
- விசாகப்பட்டினம் – செகந்திராபாத் (12805)
- புவனேஸ்வர் – பெங்களூர் (18463)
- ஹப்பட்டினம் – செகந்திராபாத் (20833 )
- செகந்திராபாத்-விசாகப்பட்டினம் (20834)
இவை தவிர, மச்சிலிப்பட்டினம் – திருப்பதி, நர்சாபூர் – நாகர்சோல், பெங்களூர் – டானாபூர், திருப்பதி – காக்கிநாடா ரயில் மற்றும் வேறு சில ரயில்களையும் தெற்கு மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. மேலும், 13 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
Bulletin No. 27 – SCR PR No. 349 on "Cancellation of Trains due to Heavy Rains" pic.twitter.com/7EyjD48g5G
— South Central Railway (@SCRailwayIndia) September 2, 2024
Bulletin no.28 SCR PR No.351 dt.02.09.2024 on "Cancellation/diversion of trains due to heavy rains" @drmvijayawada @RailMinIndia pic.twitter.com/PNVTWkeEYF
— South Central Railway (@SCRailwayIndia) September 2, 2024