பலர் புதிய கார் வாங்க வங்கிக் கடனை நம்பியுள்ளனர். இப்போது வங்கிகளும் கடன் வழங்கும் செயல்முறையை எளிதாக்கியுள்ளன. இருப்பினும், ஒவ்வொரு வங்கியும் நான்கு சக்கர வாகனம் வாங்க வெவ்வேறு வட்டி விகிதத்தில் கடனை வழங்குகிறது.
இந்த நிலையில், குறைந்த வட்டியில் கார் கடன் வழங்கும் 5 சிறந்த வங்கிகளின் விவரங்கள் பற்றி கீழே காண்போம்.
பாரத ஸ்டேட் வங்கி
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த வட்டியில் கார் கடனை வழங்குகிறது. அதன் வாடிக்கையாளர்களுக்கு 8.65 சதவீத வட்டி விகிதத்தில் கார் கடனை வழங்குகிறது. நீங்கள் எஸ்பிஐயில் கார் கடன் வாங்கினால், ஒவ்வொரு லட்ச ரூபாய்க்கும் செலுத்த வேண்டிய மாதாந்திர இஎம்ஐ ரூ.2,472 (தோராயமாக) செலுத்த வேண்டும்.
ஆக்சிஸ் வங்கி
தனியார் வங்கிகள் என்று வரும்போது, புதிய கார் வாங்க லோன் எடுக்க ஆக்சிஸ் வங்கியைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்கின்றனர் வங்கி நிபுணர்கள். ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 8.50 சதவீத வட்டியில் கார் கடனை வழங்குகிறது. வாங்கிய கடனின் ஒவ்வொரு ரூ.1 லட்சத்திற்கும் ரூ.2,465 மாதாந்திர இஎம்ஐ செலுத்த வேண்டும்.
பேங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆப் பரோடாவில் கணக்கு வைத்திருந்தால் குறைந்த வட்டியில் கார் லோன் பெறலாம். பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு 8.70 சதவீத வட்டியை வழங்குகிறது. அதாவது ரூ. 1 லட்சம், உங்கள் மாதாந்திர EMI சுமார் ரூ. 2,474 ஆக இருக்கும்.
ஐசிஐசிஐ
தனியார் துறையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ புதிதாக கார் வாங்குபவர்களுக்கு 8.75 சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது. இந்த வங்கியில் கார் கடன் வாங்கினால், மாதாந்திர இஎம்ஐயின் கீழ் ஒவ்வொரு லட்ச ரூபாய்க்கும் ரூ.2,477 செலுத்த வேண்டும்.
பேங்க் ஆஃப் இந்தியா
பாங்க் ஆஃப் இந்தியா நான்கு சக்கர வாகனக் கடனை குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் 8.85 சதவீதத்தில் வழங்குகிறது. இந்த வங்கிக் கடனில் புதிய கார் வாங்கினால், ஒவ்வொரு ஒரு லட்ச ரூபாய் கடனுக்கும் இஎம்ஐயின் கீழ் மாதம் ரூ.2,481 செலுத்த வேண்டும்.