நாட்டில் வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் வட இந்தியா குளிரால் நடுங்குகிறது. டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பனிமூட்டம் அதிகரித்து உள்ளது.
இதற்கிடையில், காஷ்மீரில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. டெல்லியில் சராசரி குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 5.3 மற்றும் 16.2 டிகிரியாக இருந்த நிலையில், நேற்று சில பகுதிகளில் 3 டிகிரி பதிவாகியுள்ளது. பல இடங்களில் இன்று கடும் மூடுபனி மற்றும் குளிர் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அங்குள்ள மக்கள் கடும் குளிரில் உறைந்து போயுள்ளனர். தால் ஏரியின் புறநகரில் உள்ள சில பகுதிகளில் தண்ணீர் உறைந்துள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் முடங்கியது.
ஸ்ரீநகரில் மைனஸ் 5.8 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. வட இந்தியாவில் இன்னும் இரண்டு நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், கடும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஐஎம்டி தெரிவித்துள்ளது.