சிம் பரிமாற்ற முறைகேடுகளைத் தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. மொபைல் எண்ணை மாற்றாமல் நெட்வொர்க்கை மாற்றுவதற்கு போர்ட்டிங் பொதுவாக வழங்கப்படுகிறது. ஆனால், சில மணி நேரங்களுக்குள் நடக்கும் இந்த சிம் பரிமாற்றத்தில் முறைகேடுகள் நடப்பதை TRAI கண்டறிந்துள்ளது. இந்நிலையில், அந்த முறைகேடுகளை தடுக்க புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின்படி நெட்வொர்க்கை மாற்ற சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த புதிய விதி ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும், புதிய விதியின்படி, மொபைல் எண் போர்ட்டிங்கிற்கு தகுதி பெற ஏழு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (TRAI) வெளிப்படுத்தியுள்ளது. சிம் கார்டு பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்க டிராய் இந்த முடிவை எடுத்துள்ளது.