இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. சிலிண்டர் விலை அதிரடியாக குறைய வாய்ப்பு.. பட்ஜெட்டில் வரவிருக்கும் மாற்றம்!!

 

நாடு முழுவதும் வணிகம் மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கு சிலிண்டரின் தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த சிலிண்டரின் விலையை கச்சா எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றனர். இத்தனை நாட்கள் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில் வணிக உபயோக சிலிண்டரின் விலை மட்டும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் சிலிண்டர் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதன் முடிவில் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த கூட்டு தொடரின் முடிவில் சிலிண்டரின் விலையை குறைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிலிண்டர் விலை குறையலாம் என தெரிவித்துள்ளனர்.

 
 
 
Exit mobile version