கடந்த மே 16 ஆம் தேதி ரூ. 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி ரூ. 2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் நாளை முதல் ரூ.2000 நோட்டு செல்லாது? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கிறது. இருப்பினும், இந்தக் கேள்விக்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே விரிவான பதிலை அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தகவலின் படி,
‘மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று மே 16ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த நோட்டின் மூலம் எந்தவிதமான நிதி பரிவர்த்தனைக்கும் அனுமதி இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நோட்டு வழக்கம் போல் செல்லுபடியாகும். அதாவது.. அக்டோபர் 1-ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டுமே இந்த நோட்டை மக்கள் மாற்றிக்கொள்ள முடியும். முன்பு போல் வங்கிகளில் டெபாசிட் செய்யவோ, வங்கிகளிலேயே நோட்டுகளை மாற்றவோ முடியாது.
இருப்பினும், அக்டோபர் முதல் ரிசர்வ் வங்கியின் கிளைகளில் இந்த நோட்டுகளை மாற்றியவர்கள், பழைய காலக்கெடுவை ஏன் தவறவிட்டனர் என்பதை விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.