இம்மாத இறுதியுடன் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைகிறது. ரூ.2 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டிக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி மே 19ஆம் தேதி அறிவித்தது. அதன்படி மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதற்கான காலக்கெடுவாக செப்டம்பர் 30ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. அதுவரை ரூ.2 ஆயிரம் நோட்டு சந்தையில் புழக்கத்தில் இருக்கும் என்றும் அதன் பிறகு அது செல்லாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரப்படி சந்தையில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் 97 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டன. ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த 20 நாட்களுக்குள் 50 சதவீத நோட்டுகள் திரும்பி வந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் இன்னும் 7 சதவீத நோட்டுகள் வரவில்லை. இந்நிலையில், ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருப்போர், அருகில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது சிறிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.