நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

 

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் JN1 கொரோனா துணை மாறுபாடு பரவி வருவது கண்டறியப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா அறிகுறிகள் இருந்தால் RT PCR பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். சோதனைகள் நேர்மறையாக இருந்தால், மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்கு அனுப்பப்பட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நிலைமையை மறுஆய்வு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

இந்தியாவில் XBB மாறுபாட்டுடன் JN1 துணை மாறுபாடும் பரவி வருவது தெரியவந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 335 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன மற்றும் ஐந்து பேர் இறந்துள்ளனர்.

 
 
Exit mobile version