வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீட்டித்தது மத்திய அரசு!

 

இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை மத்திய அரசு காலவரையின்றி நீட்டித்துள்ளது.

முன்னதாக, நாடு முழுவதும் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கும் வகையில், விலையை நிர்ணயம் செய்ய மார்ச் 31ம் தேதி வரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

 

இந்த கடைசி கெடு இன்னும் சில நாட்களில் முடிவடைவதால், மார்ச் 31ம் தேதிக்குப் பிறகும் வெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை வகுத்து செயல்படுத்தும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

 
 
 
Exit mobile version