டீப்ஃபேக் வீடியோக்கள் தொடர்பாக சிறப்பு அதிகாரியை நியமிக்க மத்திய அரசு முடிவு

 

இணையதளங்களில் உள்ள டீப்ஃபேக் வீடியோக்களை ஆய்வு செய்வதற்கும், அதற்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வதில் மக்களுக்கு உதவுவதற்கும் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் வீடியோக்‍கள் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து பலரும் அச்சம் தெரிவித்தனர்.

 

இதைதவிர்க்‍கும் பொருட்டு ஆலோசனை மேற்கொண்ட மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டீப்ஃபேக் வீடியோக்களை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.

இந்தநிலையில், ஏற்கனவே உள்ள போலி வீடியோக்‍களை ஆராயவும், அதுகுறித்து வழக்‍குப்பதிவு செய்யவும் சிறப்பு அதிகாரி நியமிக்‍கப்படுவார் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 
 
 
Exit mobile version