பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டத்தில், நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கோரலாம்.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, பிற்பகலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டடத்தில் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சிகள் தாங்கள் எழுப்ப விரும்பும் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வாய்ப்புள்ளது.
