எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக 3 ஆவது நாளாக மக்களவை முடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் 2வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. 3வது நாளான இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை 11 மணிக்கு தொடங்கியவுடன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அதானி விவகாரத்தை முன்னிறுத்தி “We Want Justice” மற்றும் “Down Down” கோஷம் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
- Advertisement -
நாள்தோறும் அமளியில் ஈடுபடுவதால் மக்களவை அலுவல் நேரம் வீணாகிறது என அவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தும், தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.