பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!
பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பிரதமர் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் பங்கேற்றார். பிரச்சாரம் மற்றும் இதர பணிகளை முடித்துக் கொண்டு விமான நிலையத்தை அடைந்தார்.
ஆனால் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி திரும்பும் பயணம் தாமதமானது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இம்மாதம் 20-ம் தேதி இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறான நிலையில் இன்று இரண்டு பேரணிகளில் கலந்துகொண்டார்.
Posted in: இந்தியா