இந்திய ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஹைபிரிட் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது.
கொரோனாவின் பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்து பின்னர் ஹைப்ரிட் முறை தொடங்கியது. இதனால், பல ஊழியர்கள் மூன்று நாட்கள் அலுவலகம் சென்று, மீதமுள்ள இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்தனர்.
இந்த உத்தரவில், ஊழியர்களை ஐந்து நாட்களுக்கு அலுவலகத்திற்கு வருமாறு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மனித வளத்துறை தலைமை அதிகாரி பெயரில் இ-மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், ஊழியர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அந்தந்த பிரிவு மேலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.