ஏர் இந்தியா நிறுவனத்துக்கு புதிதாக 500 விமானங்களை வாங்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி நெருக்கடியில் தள்ளாடி வந்த மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் வாங்கியது. அதைத் தொடர்ந்து நிறுவனத்தை மேம்படுத்தும் பணியை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா நிறுவனத்தை சிங்கப்பூரின் விஸ்தாரா விமான சேவை நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாக அண்மையில் அறிவித்தது.
அந்த வரிசையில் தற்போது பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிதாக 500 விமானங்களை வாங்க, போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடம் டாடா குழுமம் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
