நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைத்துள்ளது. படத்தை வெளியிட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் காட்சிகள் உள்ளதால் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இப்படம் ஏற்கனவே தணிக்கை முடிந்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்திலேயே இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
கேரளாவில் இருந்து காணாமல் போன இளம்பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத செயலில் ஈடுபடுவதை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.