கொரோனா தடுப்பூசி காரணமாக இளைஞர்களிடையே திடீர் மரணம்? ஐசிஎம்ஆர் விளக்கம்

 

கொரோனா தடுப்பூசி காரணமாக இளைஞர்களிடையே திடீர் மரணம் ஏற்படவில்லை என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொரோனா பேரிடர் காலம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு திடீர் உயிரிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய ஐ.சி.எம்.ஆர் நாடு முழுவதும் ஆய்வு நடத்தியது.

 

குறிப்பாக 18 முதல் 45 வயதுடைய 729 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கொரோனா பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் மற்றும் திடீர் மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் 24 அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பு அதிக குடித்தது அல்லது அதிக உடல் உழைப்பு உள்ளிட்டவைகளால் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 
 
 
Exit mobile version