இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமாக முடிந்தது. இஸ்ரோ அனுப்பிய 36 செயற்கைக்கோள்கள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
எல்விஎம்-3 ராக்கெட் இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (SHAAR) ஏவப்பட்டது. கால அட்டவணையின்படி, எல்விஎம்-3 ராக்கெட் காலை 9 மணிக்கு ஷார் ஏவுதளத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. ஒன்வெப்க்கு (OneWeb) சொந்தமான மொத்தம் 36 செயற்கைக்கோள்களுடன் புறப்பட்டது.
சுமார் 20 நிமிட பயணத்திற்குப் பிறகு, பூமியின் மேற்பரப்பில் இருந்து 450 கி.மீ. அடைந்தது ராக்கெட் சுமந்து செல்லும் செயற்கைக்கோள்களை ஒவ்வொன்றாக லியோ ஆர்பிடல் வட்டப்பாதையில் செலுத்தியது.
அதேசமயம், LVM-3M-3 ராக்கெட் உயரம் 43.5 மீட்டர் மற்றும் எடை 643 டன் கொண்டது. ராக்கெட் சுமந்து செல்லும் 36 செயற்கைக்கோள்களின் எடை 5,805 கிலோ ஆகும்.
இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும், ஒன்வெப் நிறுவனத்திற்கும் இடையே மொத்தம் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி முதல் 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. மீதமுள்ள 36 செயற்கைக்கோள்கள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டன.
https://twitter.com/ANI/status/1639833199349047296?s=20