-Advertisement-
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தது. நமது நாட்டிலும் அமெரிக்காவிலும் பணவீக்கம் குறைந்து வருவது முதலீட்டாளர்களின் உணர்வை வலுப்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கிய சந்தைகள் இறுதி வரை ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 145 புள்ளிகள் உயர்ந்து 62,677 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 18,660 புள்ளிகளில் நிலைத்தது.
-Advertisement-
பிஎஸ்இ சென்செக்ஸ்
அதிக லாபம் ஈட்டியவர்கள்:
டெக் மஹிந்திரா (1.84%), டாடா ஸ்டீல் (1.66%), என்டிபிசி (1.63%), இண்டஸ் இண்ட் வங்கி (1.44%), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (1.34%).
நஷ்டம் அடைந்தவர்கள் :
நெஸ்லே இந்தியா (-1.82%), ஐசிஐசிஐ வங்கி (-1.16%), பார்தி ஏர்டெல் (-1.13%), ஏசியன் பெயிண்ட்ஸ் (-0.95%), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (-0.89%).
-Advertisement-