தொடர்ந்து 5 நாள்கள் நஷ்டத்திற்குப் பிறகு இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சந்தைகள் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இறுதியாக, இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயர்ந்து 57,635 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 16,985-ல் நிலைத்தது.
பிஎஸ்இ சென்செக்ஸ்
- Advertisement -
அதிக லாபம் ஈட்டியவர்கள்:
நெஸ்லே இந்தியா (2.54%), ஏசியன் பெயிண்ட்ஸ் (2.32%), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (2.27%), டைட்டன் (2.21%), சன் பார்மா (1.84%).
- Advertisement -
அதிக நஷ்டம் அடைந்தவர்கள்:
டாடா ஸ்டீல் (-3.31%), இண்டஸ் இண்ட் வங்கி (-2.31%), பார்தி ஏர்டெல் (-0.98%), இன்ஃபோசிஸ் (-0.93%), விப்ரோ (-0.81%).