பாம்புடன் விளையாடி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். வாயில் பாம்பை வைத்து செல்ஃபி வீடியோ எடுக்கும் போது, கடித்து உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் பன்சுவாடா மண்டலம் தேசாய்பேட் கிராமத்தில் வியாழக்கிழமை இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் மோச்சி சிவராஜ் (20) என்பவர் பாம்புகளை பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் வியாழக்கிழமை அவர் சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்தார்.
அதன் பிறகு விஷப்பாம்பை வாயில் போட்டு செல்ஃபி வீடியோ எடுக்க முயன்றார். ஆனால், அந்த நேரத்தில் பாம்பு அந்த இளைஞரின் வாயில் விஷத்தை கக்கியது. சிறிது நேரத்தில் சிவராஜ் இறந்தார். இந்த சம்பவம் உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.