சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 22 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் அடுத்த மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய உள் கட்டமைப்பை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் 100 நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சை, சேலம், ஈரோடு, வேலூர், போபால், இந்தூர், ஆக்ரா, வாரணாசி, புவனேஸ்வர், சூரத், உதய்பூர், விசாகப்பட்டினம், அகமதாபாத், காக்கிநாடா, புனே, அமராவதி, பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய 22 நகரங்களில் மார்ச் மாதத்திற்குள் அனைத்து திட்டங்களும் நிறைவடையும் என்றும் எஞ்சிய மற்ற நகரங்களில் மூன்று அல்லது நான்கு மாதங்களில் திட்டப் பணிகள் முடிவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.