Advertisement
இந்தியா

மாணவர்களுக்கு எஸ்பிஐ பம்பர் ரூ.7.5 லட்சம் உதவித்தொகை வாய்ப்பு!

ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியேற்றுவது கல்வி ஒன்றே. கல்வி ஒன்றே உங்களை வறுமையில் இருந்து உயர் நிலைக்கு உயர்த்தும். படித்தால்தான் அவர்களின் குடும்பங்களும் உயர் நிலையை அடையும். ஆனால் படிக்க பண கஷ்டம் துரத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் கல்விச் செலவு அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. ஒருபுறம் அன்றாடத் தேவைகளின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்க, மறுபுறம் குழந்தைகளின் கல்வி என்பது பெற்றோருக்கு சுமையாக மாறியுள்ளது. குழந்தைகள் படிக்கும் திறமை இருந்தும், குடும்பப் பொருளாதாரப் பிரச்னைகள் அவர்களுக்குத் தடையாக அமைகின்றன. பணப்பற்றாக்குறையால் பலர் படிப்பை இழக்கின்றனர். இந்நிலையில், நிதி நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு எஸ்பிஐ நற்செய்தியை வழங்கியுள்ளது. எஸ்பிஐ ஆஷா உதவித்தொகை மூலம் மாணவர்களுக்கு ரூ. 7.5 லட்சம் உதவித்தொகை வழங்க முன் வந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நாட்டின் கல்வி முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கு பல உதவித்தொகை திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. SBI மாணவர்களுக்கான ஆஷா உதவித்தொகை திட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். பள்ளி மாணவர்கள், இளங்கலை, முதுகலை பட்டதாரிகள், ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறலாம். விதிகளின்படி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.7.5 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 01 2024 ஆகும். மேலும் இந்த உதவித்தொகைக்கு யார் தகுதியானவர்கள்? விதிமுறைகள் என்ன? அந்த விவரங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை, நடப்பாண்டு பள்ளிக் கட்டணம் செலுத்திய சான்று, மாணவர் அல்லது அவர்களது பெற்றோரின் வங்கி விவரங்கள், வருமானச் சான்றிதழ், எஸ்பிஐ ஆஷா உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாணவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம். விண்ணப்ப செயல்முறையை ஆன்லைனில் முடிக்க முடியும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்ற வேண்டும். எஸ்பிஐயின் ஆஷா ஸ்காலர்ஷிப் 2024க்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 01, 2024 என்பதை நினைவில் கொள்வது அவசியம். மேலும் விவரங்களுக்கு கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.sbifashascholarship.org/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!